பிரித்தானியாவில் மாவீரர்கள் நினைவாக இரத்ததான நிகழ்வு!!


பிரித்தானியா Liverpool பகுதியில் 22/11/2019 அன்று   11 மணி முதல் 3 மணி வரை இரத்த தான முகாம் நடைபெற்றது, பின்பு அதனை தொடர்ந்து  மாலை 4.30 மணிக்கு மாவீரர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வும்  உணர்சிபூர்வமாக நடைபெற்றது.

இதனையடுத்து நேற்றுமுன்தினம்  24/11/2019 ஞாயிற்றுக்கிழமை லண்டன் மாநகரில் Tooting, Edgware மற்றும் Southall பகுதிகளிலும் இரத்ததான முகாம்கள்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெருமளவிலான செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர். 

மாவீரர்களின் உயிர்த்தியாகத்தை நினைவுகூர்வது மட்டுமல்லாது அதனை உலகறியச் செய்வதாகவும் இந்நிகழ்வு அமைந்தது குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.