ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு விஜிந்த் மலேசியா நோக்கி பயணம்.

21 வது ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு விஜிந்த் இன்றையதினம் மலேசியா நோக்கி பயணமாகின்றார்.
மலையக இளைஞன் விஜிந்தை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் முன்னால் அமைச்சர் இராதாகிருஸ்ணன் இதற்கான நிகழ்வு கொழும்பில் நேற்று முன்தினம் (27.11.2019) இடம்பெற்றது.
இன்றையதினம் இரவு 11 மணிக்கு மலேசியா நோக்கி விஜிந்த் பயணமாகின்றார்.
பூண்டுலோயா சீன் பிரிவில் வசிக்கும் துரைசாமி விஜிந்த் என்ற 36 வயதுடைய விளையாட்டு வீரன் எதிர்வரும் டிசம்பர் மாதம் மலேசியாவில் 2 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 21 வது ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கையின் சார்பாக கலந்து கொள்வதற்கு தெரிவு செய்யப்ட்டு மலேசியா பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.