ஆரையம்பதி திருநீற்று கேணி பகுதியில் குளத்தில் மூழ்கி இளைஞர்கள் மூவர் மரணம்;ஊரே சோகத்தில் தத்தளிக்கிறது!!

ஆரையம்பதி திருநீற்றுகேணிபகுதியில் புதிதாக அகழப்பட்ட குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நால்வரில் ஒருவர் பகுதி மக்களினால் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் ஏனைய  மூன்று இளைஞர்கள் குளத்தில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்கள்  எனவும் அறிய முடிகிறது.

சுரேஷ்குமார் தர்சன் வயது 20, யதுர்சன்19,கே.திவாகரன் 19 இவர்கள் மூவரும் வெள்ள நீர் நிரம்பிய குளத்திற்குள் இறங்கியதும் சுரியுனுள் புதையுண்டு மூச்சுத் திணறி உயிரிழந்திருக்ககூடும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

மூவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டு ஆரையம்பதி ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ்நிலையத்தினூடாக மேற்கொள்ளப்படுவதாகவும் அறியமுடிகிறது.

இந்த துயர் சம்பவத்தினால் ஊரே சோகத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post