புதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவா?

இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், புதிய பிரதமராக தினேஸ் குணவர்த்தனவை நியமிக்குமாறு விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நாளை அநுராதபுரத்தில் பதவியேற்கவுள்ளதாக உடுவே தம்மாலோக தேரர் முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளைய தினமே மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பிரதமர் பதவியை வழங்க தீவிர ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இலங்கையின் பதிய பிரதமர் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post