இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான வன்செயல்களற்ற தளத்துக்கான ஒன்றிணைவு; ஊடக அறிக்கை!!

                                                                                                                           - விஜித்தா -
கொழும்பு, இலங்கை (2019 நவம்பர்; 25): மூன்றில் ஒன்றிற்கும் அதிகமான பெண்கள் தமது வாழ்வின் சில கட்டங்களில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை எதிர் கொண்டுள்ளமையானது இதனை உலகின் மோசமான மனித உரிமை மீறலாக மாற்றியுள்ளது. சமூகத்தின் ஏற்பின்மை காரணமாக இது இன்னும் இரகசியமான, அவமானமான மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய விடயமாகவே காணப்படுகிறது. வன்முறையற்ற வாழ்வுக்கான மனித உரிமையானது மதிக்கப்படாவிடில் நாம் தனிப்பட்ட வகையிலும் சமூகமாகவும் அடுத்தகட்ட வன்முறைகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் பாதிப்புக்களுக்கும் உடந்தையாகின்றோம்.

அவசரகால நிலைமைகள், நெருக்கடிகளில் பெண்களும் சிறுமிகளுமே அதிகம் பாதிப்படைகின்றனர். இதன் காரணமாகவே சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான தேசிய பேரவை நிறுவப்பட்டது. UNFPA மற்றும் OXFAM இன் இணைத்தலைமையிலான பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான தேசிய பேரவையானது அரசாங்கம், ஐநா முகவரகங்கள், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள், சிவில் சமூகம் அமைப்புக்கள் உள்ளிட்ட 50 அமைப்புக்களையும் துறைசார் நிபுணர்களையும் உள்ளடக்கிய ஒரு ஒன்றியமாகும். 

இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் அற்ற தளமமைத்தல் மற்றும் அதற்கான ஆதரவுதிரட்டலில் இந்த தேசிய பேரவையின் 15 ஆவது வருடத்தை இந்த ஆண்டு குறித்து நிற்கிறது. இந்த அடைவைக் கொண்டாடும் வகையில் 'இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான வன்செயல்களற்ற தளத்துக்கான ஒன்றிணைவு’ எனும் தலைப்பிலான ஒரு ஊடக மாநாடு நடைபெற்றதுடன் அதில் வீடு, வேலைதளம் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் பாதுகாப்பான தளங்கள் அமைக்கப்படுவதன் தேவை எடுத்துக்காட்டப்பட்டது. இந்த ஊடக மாநாடானது பெண்களுக்கெதிரான வன்செயல்களை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25 ஆம் திகதி முதல் மனித உரிமைகள் தினமான டிசெம்பர் 10 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் வருடாந்தம் இடம்பெரும் ‘பால்நிலை அடிப்படையிலான வன்செயல்களுக்கு எதிரான 16 நாள் செயலணி’ எனும் சர்வதேச பிரச்சார முன்னெடுப்புடன் இணைந்ததாகும். 

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான தேசிய பேரவையின் இணைத் தவிசாளரும் இலங்கைக்கான UNFPA பிரதிநிதியுமான திருமதி ரிட்சுநக்கேன் அவர்களின் வரவேற்புரையில் “பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் காரணமாக பெண்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளனர். நாம் இதற்கெதிராக ஒன்றிணைந்து உறுதியாக குரல்கொடுப்பதுடன் இதனை முழுமையாகவே ஒழிப்பதற்குப் பொருத்தமான கொள்கைகள் வகுக்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார். ஒரு கொலைக் குற்றவாளியை விடுதலை செய்தமை தொடர்பான அண்மைய மக்கள் கருத்தாடலுடன் தொடர்பாக குறித்த நிகழ்வின் கொடூரத்தன்மை, யதார்த்தம் மற்றும் தொடர்புத்தன்மை பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த தேசிய பேரவையின் 15 வருட தொடர் முயற்சியின் காரணமாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பான இலங்கைகையை உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படினும் பால்நிலை சமத்துவத்தை அடைவதில் ஒரு நீண்ட பயணம் எம்முன் உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான தேசிய பேரவையின் இணைத் தவிசாளரும் இலங்கைக்கான OXFAM பணிப்பாளருமான திரு. போஜான்கொலன்ஸிஜா அவர்கள் “இந்த தேசிய பேரவையில் இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளின் யதார்த்தநிலை பற்றிய விழிப்புணர்வை நாம் தொடர்ச்சியாக மேற்கொண்டதுடன் கொள்கை மாற்றத்துக்காகவும் பரிந்துரைத்தோம். ஆனால் இன்னும் பல விடயங்கள் செய்யப்படவேண்டி உள்ளன. ஒரு வன்செயல் அது வீட்டில் இடம்பெற்றாலும் அல்லது வேலைத்தளத்தில் இடம் பெற்றாலும் அல்லது பொது போக்குவரத்தில் இடம் பெற்றாலும் குறித்த பிரச்சினை தொடர்பாக சமூக மாற்றத்துடன் அனைவரும் பொறுப்புக்கூறக் கூடியதொரு இலங்கை உருவாக்கப்படுவதை நாம் உறுதிசெய்ய வேண்டும்” என அவர் குறிப்பிட்டார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post