அரசியலில் தொடரும் பரபரப்பு: மற்றொரு அமைச்சரும் இராஜினாமா!!!
பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பலர் தற்போது பதவியை இராஜினாமா செய்து வருகின்றனர்.
அதற்கமைய 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய ஜனநாயக முன்னிணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து நேற்று இராஜினாமா செய்துகொண்டார்.
இந் நிலையில் சற்றுமுன் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் அமைச்சு பதவியை இராஜனாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments