சாமி வழி விட்டாலும் ஐயர் தடை விதிப்பதனைப் போன்ற சம்பவம் கல்லடியில்; மாவீரர்களை நினைகூர தடை விதிப்பு!!

கல்லடியில் மாவீரர் தின நினைவிற்கான நினைவுச் சுடரினை ஏற்றவிடாமல் தடுத்த ஆலய நிருவாகத்தின் பொறுப்பில் இருப்பவர்...

கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் மாவீரர் தின நிகழ்விற்கு விளக்கேற்ற விடாமல் ஆலய நிருவாகத்தின் பதவியில் உள்ள ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் "யாரும் சாகவில்லை யாரையும் புதைக்கவில்லை" "இது ஆலயக்காணி" என அங்கு நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களை குறித்தவர் ஊடாக அடாவடித்தனமாக நிறுத்தப்பட்டது மிகவும் வேதனையான சம்பவமாகும்.

இன்றைய தினம் நாட்டில் மட்டுமன்றி தமிழன் வாழும் உலக நாடுகளெங்கிலும் இந்த நிகழ்வு நடைபெற்று வருகின்றது ஆனாலும் இந்த கல்லடி பகுதியில் எதற்காக தடையேற்படுத்த பட வேண்டும் என்ற கேள்வி் எழுகின்றது 

கடந்த வருடம் இந்த இடத்தில் விளக்கேற்றி நிகழ்வு இடம்பெற்ற போதிலும் இம்முறை தடை போட்ட தமிழர்கள் யார் என்பது வெளிவரவேண்டும் 

இந்த மாவீரர் தினத்திற்காக ஆலயங்களில் விளக்கேற்றி பூசைவழிபாடுகளை செய்து அனுஸ்டித்து வருகின்றனர் அங்கு உடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதா? உடலங்கள் புதைக்கப்பட்டதன் காரணமாகவா? ஆலயங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள்.

அதுமாத்திரமல்ல இலங்கையின் புதிய ஜனாதிபதி உள்ளிட்டோரும் மாவீரர் தினத்திற்கு எந்த வித எதிர்ப்போ, தடையோ விதிக்காதவிடத்து "இவர்களின் கோவணம் எதற்காக எரிகிறது" என நிகழ்வினை ஒழுங்கு செய்த இளைஞர்கள் கொதித்தெழுந்துள்ளதாக அறிய முடிகிறது.

குறித்த பகுதியில் நிகழ்வினை தடுத்த ஆலய நிருவாகத்தினை சேர்ந்த பொறுப்பாளர் தமிழினத்திற்கு பதிலளிக்க வேண்டும் என்பதுடன் இனிவரும் காலங்களில் இறந்தவர்களின் ஆத்மாவிற்கு தமிழினத்துக்குள் இருந்து தமிழர்களானவர்கள் கொச்சைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பதனையும் வினாக்குறியோடு மக்களிடமே விட்டுச் செல்கிறோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post