முன்னாள் ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம்.

நாட்டு மக்களுக்கு சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தினை பெற்றுக் கொடுத்தமைக்கு அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் முன்னாள் ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்தனர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சிக் காலத்தில் சுகாதார துறையில் ஏற்பட்ட பிரச்சினைகளின்போது அவற்றை சுமூகமாக தீர்ப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நன்றி கூறும் விதமாக இன்றையதினம் அரச மருத்துவ அதிகாரிகளின் சங்க உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி அவர்களை முன்னாள் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்களின் ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு அவர் பெற்றுக்கொடுத்த சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் முன்னிற்பதற்கு தயாரென அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தினர் இதன்போது முன்னாள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர்.

அத்துடன் போதைப்பொருளை ஒழிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட போதை எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தினர் முன்னாள் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.0/Post a Comment/Comments

Previous Post Next Post