வடக்கு ஆளுநர் ராகவன் – ஸ்டாலின் சந்திப்பு !

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.

மறைந்த கருணாநிதியின் சிலை மற்றும் முதலாம் ஆண்டு மலரை அவருக்கு ஸ்டாலின் பரிசாக வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கலாநிதி சுரேன் ராகவன், 41 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வட மாகாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது, இது புதிய உறவின் ஆரம்பமாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.

மேலும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் குறித்து இருவரும் கருத்துப் பரிமாற்றம் செய்ததாகவும் அவர் கூறினார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post