கந்தளாயில் இன்று சட்டத்தை மீறி பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுஜன பெரமுனவின் நால்வர் கைது!!

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக் கூட்டம் நடத்திய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தளாயில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கிளை காரியாலயத்தின் பின்னால் உள்ள வீடொன்றினுள் கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கூட்டம் நடத்திய 35,38,28 மற்றும் 30 வயதுடைய நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்தவகையில், பொலிஸார் இவர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.