யாழ் மாநகர நவீன சந்தைக்கு முதல்வர் ஆனல்ட் விசேட கள விஜயம்.

யாழ் வணிகர் கழகத்தின் அழைப்பின் பிரகாரம் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் யாழ் மாநகர நவீன சந்தைக்கு விசேட கள விஜயம் ஒன்றை நேற்றையதினம் மேற்கொண்டார்.

குறித்த விஜயத்தின் போது கடை நடாத்துனர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேவைகள், குறைபாடுகள் தொடர்பில் வியாபாரிகளுடன் கலந்துரையாடியதுடன், அவர்களிடம் நேரடியாக கேட்டு அறிந்து கொண்டார்.

மேலும் ஒவ்வொரு கடைகளுக்குமிடையில் ஏற்படுத்த வேண்டிய ஒழுங்கு முறைகள், மலசல கூட வசதிகளை முறையாக ஒழுங்குபடுத்துதல், கடைகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் முதல்வர் விசேட கவனம் செலுத்தினார்.

அண்மையில் மாநகர சபையில் முதல்வர் அவர்களுக்கும் - யாழ் வணிகர் கழகத்திற்கும் (வர்த்தக சங்கத்திற்கும்) இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் தீர்மானத்திற்கமைவாக இவ் நேரடி கள விஜயம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் நேரடிக் கள விஜயத்தில் வணிகர் கழக தலைவர், நிர்வாக உறுப்பினர்கள், மாநகர பொறியியலாளர்கள், மாநகர சந்தை மேற்பார்வையாளர்கள், வருமான வரிப் பரிசோதகர்கள், சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்கள், மாநகர உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் முதல்வருடன் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post