வாக்காளர்களுக்கு பொலிசாரின் முக்கிய அறிவித்தல்!!

வாக்களிக்கும் நிலையங்கள் “டெலிபோன் பூத்” அல்ல என்பதனால் வாக்களிக்கும் நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு செல்வது அவசியம் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிக்க செல்லும் போது வாக்குச்சீட்டு மற்றும் அடையாளத்தை உறுதி செய்வதற்கான பத்திரத்தை மாத்திரம் கொண்டு செல்வது போதுமானதாகும் என அவர் கூறியுள்ளார்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கையடக்க தொலைபேசியை கொண்டு சென்று வாக்களிக்கும் நிலையத்தினுள் கையடக்க தொலைபேசி அலரும் சத்தம் கேட்டால் அது கடமையில் இருக்கும் அதிகாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் அவர் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.