புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு?

Image result for parliament sri lanka"
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நாளைய தினம் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் எண்ணிக்கையை 15 ஆக குறைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தரப்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தலுக்கு செல்வதில்லை என தீர்மானித்துள்ளதால், ஜனாதிபதி காபந்து அரசாங்கத்தை அமைக்க உள்ளார்.

இந்த நிலையில் அமைச்சரவையில் நியமிக்க போகும் நபர்கள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிக்கு அமைய குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்காதவர்களை அமைச்சரவைக்கு நியமிக்க வேண்டும். குற்றச்சாட்டு சுமத்தப்படாத நபர்களை சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.