ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொள்ளும் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை!!

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச நாளை கலந்துகொள்கிறார்.

இடைக்கால அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை (26) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பிரதமர் உட்பட ஏனைய அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.

அரச தலைவரின் இந்திய பயணம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. அத்துடன், முக்கியமான அமைச்சரவைப் பத்திரங்களும் முன்வைக்கப்படவுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post