ஒருகோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை பாதணிக்குள் வைத்து கடத்திய யுக்ரேன் பெண் கைது!!

சுமார் ஒரு கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க பிஸ்­கட்­டு­களை தான் அணிந்­தி­ருந்த பாத­ணிக்குள் மறைத்து கடத்தி வந்த வெளி­நாட்­ட­வ­ரான பெண் ஒருவர் கட்­டு­நா­யக்க விமான நிலைத்தில் பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்புப் பிரி­வி­னரால் கைது­செய்­யப்­பட்­டுள்ளார்.


கைது செய்­யப்­பட்ட பெண் யுக்ரேன் பிர­ஜை­யான 41 வய­தா­ன­வ­ராவார். இவர் இதே­போன்று இரண்டு தட­வைகள் இலங்கை வந்து சென்­றுள்­ள­தாக ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­தி­யாவின் பெங்­க­ளுரு விமான நிலை­யத்­தி­லி­ருந்து நேற்று அதி­காலை 4.30 மணிக்கும் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்­த­மான யூ.எல். 174 என்ற விமா­னத்தில் குறித்த பெண் வந்­துள்ளார்.

இதன்­போது, கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் அனைத்து பரி­சோ­த­னை­களும் நிறை­வ­டைந்­ததன் பின்னர், விமான நிலை­யத்­தி­லி­ருந்து வெளி­யேறிக் கொண்­டி­ருந்­த­போது, பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்புப் பிரி­வி­னரால் கைது­செய்­யப்­பட்­டுள்ளார்.


இதன்­போது, அப்பெண் அணிந்­தி­ருந்த பாதணி சோடி­க­ளுக்குள் இருந்து 2 கிலோ 320 கிராம் மொத்த நிறை கொண்ட (தலா 116 கிராம்) 20 தங்க பிஸ்­கட்­டுகள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

ஒவ்­வொரு பாத­ணி­க­ளுக்குள் தலா 10 தங்க பிஸ்­கட்­டு­களை அவர் மறைத்து வைத்­தி­ருந்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

தங்க பிஸ்­கட்­டு­களை சட்­ட­வி­ரோ­த­மாகக் கொண்­டு­வந்த இந்த யுக்ரேன் நாட்டுப் பெண்ணை மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post