பா.ம.உ.ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்!!

ஆரையம்பதியில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தாருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

ஆரையம்பதி திருநீற்றுகேணிபகுதியில் புதிதாக தோண்டப்பட்ட குளத்தில் 4 இளைஞர்கள் இன்று திங்கட்கிழமை (25.11.2019) நீரில் மூழ்கி ஒருவர் காப்பாற்றப்பட்ட நிலையில் மூவர் சடலமாக மீட்கப்பட்டனர்.

இச் சம்பவமானது இளைஞர்களின் குடும்பத்தாரையும் அப் பிரதேச மக்கள் மத்தியிலும் ஆறாத சோகத்தை உண்டு பண்ணியுள்ளது.

இந்த தகவலைத் அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மற்றும் வாலிபர் முன்னணி உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு உடன் சென்று தற்போது ஆரையம்பதி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களை பார்வையிட்டு குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், சடலங்களை அடக்கம் செய்வதற்கான உதவிகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.