அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!!!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன.

இதற்கமைய அடுத்த வருடம் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி முதலாம் தவணைக்காக பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.