கல்முனையில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுப்பு.

கல்முனை வடக்கு பிராந்திய சுகாதர வைத்திய அதிகாரி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் கண்காணிப்புடன் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டிலும் மாதர்சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்பிக்களின் பூரண ஒத்துழைப்புடனும் இன்று 30.11.2019ம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டமானது பாண்டிருப்பு கிராமம் பூராக வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.

இவ் வேலைத்திட்டம் ஆனது முற்கூட்டியே திட்டமிட்டதற்கு இணங்க பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலய பாடசாலையில் இருந்து ஆரம்பித்து, பாண்டிருப்பு கடற்கரை சிவன் கோயிலில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.. இவ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அனைத்து இளைஞர் யுவதிகளையும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும், சமூகத்தின் பால் அக்கறை உள்ள பலர் அக்கறையுடன் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 


0/Post a Comment/Comments

Previous Post Next Post