குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு வந்த சோதனை;நாட்டை விட்டு வெளியேற முடியாத கிடுக்கிப்பிடி!!

எந்தவொரு குற்றப் புலனாய்வு துறையை சேர்ந்த அதிகாரிகள் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற பொலிஸ் தலைமையகம் தடை விதித்துள்ளது.

குற்றப்புலனாய்வு துறையின் உயர் அதிகாரி நிஷாந்த சில்வா அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது தமக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட நிஷாந்த சில்வா ஜெனிவாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post