அனைத்து ஆளுநர்களும் இராஜினாமா

அனைத்து ஆளுநர்களும் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தினால் இன்று முற்பகல் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, 9 மாகாணங்களின் ஆளுநர்களும் இராஜினாமா செய்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க குறிப்பிட்டார்.

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க மற்றும் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் ஆகியோர் இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளதாக  மாருதம் செய்திகளுக்கு அறிவித்தனர்.

No comments

Powered by Blogger.