சஹ்ரான் குழுவினரால் வவுணதீவு பொலிஸ் காவலரணில் படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நினைவாக இரத்த தானம்!!

                                                                    - அம்பாறை மாவட்ட விசேட நிருபர் -
சஹ்ரான் குழுவினரால் படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்களான அமரர் கணேஸ் தினேஸ், இந்திஹ பிரசன்ன ஆகியோரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை (30) காலை 8 மணி முதல் காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை இளைஞர்களால் இரத்ததான நிகழ்வு பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்று வருகிறது.

கடந்த வருடம் 30 -11-2018 ஆம் ஆண்டு வவுணதீவு சோதனை சாவடியில் கடமையில் இருந்த வேளை ஷஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதிகளினால் கொடூரமாக முறையில் படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸாரின் நினைவாக இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது.

இரத்ததான முகாமிற்கு பல இளஞர்கள் ஆர்வத்துடன் முன்வந்து இரத்த தானம் செய்துவருகின்றமையை காண முடிந்தது கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் இரத்த வங்கியின் வைத்தியர்குழாம் , தாதியர்கள் , ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.0/Post a Comment/Comments

Previous Post Next Post