எந்த தேர்தலுக்கும் தயார் – தேர்தல்கள் ஆணைக்குழு

நாட்டின் தேவையைக் கருத்திற்கொண்டு எந்தவொரு தேர்தலுக்கும் தமது ஆணைக்குழு தயாராகவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கோ அல்லது மாகாண சபை தேர்தலுக்கோ எந்த சந்தர்ப்பத்திலும் தாம் தயாராகவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அதிகாரிகள் குழுவும் பெயரிடப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முடிவடைந்த தேர்தலுக்கான கொடுப்பனவுகளை, அந்தந்த தேர்தல் அலுவலர் ஊடாக வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.