வானவர்கள் மாரி சொரிய உறவுகளின் கண்ணீரில் கரைந்தது கஞ்சிகுடிச்சாறு, மட்டு- மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லங்கள்!!

அம்பாறை கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை 6மணி 5 நிமிடத்தில் ஏரம்பு செல்லம்மா என்ற நான்கு மாவீரர்களின் தாயார் முதல் ஈக சுடரினை ஏற்றி வைக்க ஏனைய உறவுகளும் நினைவேந்தல் சுடரினை ஏற்றி வைக்க உணர்வு பூர்வமாக கொட்டும் மழைக்கு மத்தியிலும் தாய்மார், உறவுகளின் கண்ணீரில் கரைந்தது .

தாயக விடுதலைக்காக தங்கள் இலட்சியமாக கொண்டு களமாடி மடிந்த அற்புத வீரர்களை இந்த புனித நாளில் நினைவு கூரப்பட்டது . பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் அவர்களும்  நினைவேந்தலில் கலந்து கொண்டார்.

அம்பாறை கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலும் இல்ல ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாகமணி கிருஷ்ணபிள்ளை தலைமையில் நினைவேந்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது

தாயக விடுதலை என்ற இலட்சியத்தை நெஞ்சிலே சுமந்து களமாடி மடிந்த காவிய நாயகர்களை மாவீரர்களின் பெற்றோர்களும் ,உறவுகளும் கண்ணீரில் கரைந்த நிகழ்வுகள் அனைவரது இதயங்களையும் கனக்க செய்தது.

இராணுவ தரப்பினர் மற்றும் பொலிஸார் உறவினர் கொண்டு வந்த மாவீர்களின் உருவப்படங்களை துயிலும் இல்லத்திற்குள் எடுத்துவர அனுமதிக்கப்படவில்லை அத்தோடு கீதங்களும் இசைக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது . காலை முதல் வானவர்கள் கண்ணீராய் பூ மாரி சொரிய தாயக கனவான்களின் நினைவேந்தல் உணர்ச்சி பெருக்கோடு அனுஷ்டிக்க பட்டது.கஞ்சிகுடி ஆறு மாவீரர் துயிலுமில்ல நிகழ்வுகள்👆👆👆👆👆


அதே வேளை மட்டு- மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்திலும் உணர்ச்சி பூர்வமாக அங்கு விதைக்கப்பட்ட மாவீரர்களின் தாய்மார் மற்றும் உறவினர்கள் சூழ மாவீரர் காவியப் பாடல் ஒலிக்க ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதோடு நூற்றுக்கணக்கான தென்னங்கன்றுகளும் தேசத்தின் விடிவிற்காக தம் உயிரினை தியாகித்த மாவீரர்கள் நினைவாக அங்கு நடப்பட்டது. 

மாவடிமுன்மாரி துயிலுமில்லமே கிழக்கில் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் வித்துடல் புதைக்கப்பட்ட முதலாவது துயிலுமில்லமாக கருதப்படுவதுவும் அங்கு  விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட கப்டன் காதர் அவர்களினது வித்துடலும் ஏனைய முதன்மைப் போராளிகள் தளபதிகளினது உடலும் விதைக்கப்படிருப்பது குறிப்பிடத்தக்கது.
மட்டு- மாவடிமுன்மாரி துயிலுமில்ல நிகழ்வுகள்👇👇👇👇
0/Post a Comment/Comments

Previous Post Next Post