துன்னாலை அல்லையம்பதியில் டெங்கு நுளம்பு ஒழிப்புத்திட்ட செயற்பாடு முன்னெடுப்பு.
ஸ்ரீ முருகன் சனசமூக நிலையமும் அல்லையம்பதி விளையாட்டுக் கழகத்தினரும் இணைந்து முன்னெடுத்த டெங்கு நுளம்பு ஒழிப்புத்திட்ட செயற்பாடு நேற்றுமுன்தினம் அல்லையம்பதி கிராமத்தில் நடைபெற்றது.
சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் திரு.மு.ரவிச்சந்திரன் அவர்கள் வழிகாட்டலிலும் தலைமையிலும் குறித்த செயற்பாடு நடைபெற்றது.
இதன்போது டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் பல இனங்காணப்பட்டு அவற்றை அகற்றும் நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டதுடன் தொடர்ந்து வரும் தினங்களிலும் கிராமத்தின் ஏனைய பகுதிகளிலும் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments