ஹட்டன் வனராஜா தேயிலைத் தோட்டத்தில் சந்தேகத்துக்கிடமான பையினால் மக்கள் பதற்றம்; விரைந்தனர் போலீசார்!!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – டிக்கோயா வனராஜா தோட்ட தேயிலை மலையிலிருந்துசந்தேகத்திற்கிடமான பையொன்று இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தொழிலாளர்கள் தேயிலை கொய்துகொண்டிருந்தவேளையிலேயே இப்பையை கண்டுள்ளனர். பின்னர் இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகத்தினர் உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்க, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பையினை பாதுகாப்பான முறையில் மீட்டு சோதனைக்குட்படுத்தினர்.

பைக்குள் புதிய ஆடை, இரண்டு வங்கி அட்டைகள், சிக் காட், பணம் வைக்கும் பை ஆகியன இருந்துள்ளன.

ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மேற்படி சம்பவத்தால் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பொலிஸார் வந்து சோதனை நடத்திய பின்னர் வழமைக்கு திரும்பினர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post