யாழ் இராசாவின் தோட்டம் வீதி உப ஒழுங்கை திறப்பு.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தொகுதிக்கான துரித ஊரெழுச்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் யாழ் மாநகர முதல்வர் ஆனல்ட் அவர்களின் சிபாரிசில் யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் வீதி உப ஒழுங்கை புனரமைப்புப் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீதி அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கும் நிகழ்வு குறித்த பகுதி மக்களின் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் நாடா வெட்டி மக்கள் பாவனைக்கான உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந் நிகழ்வில் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post