களுவாஞ்சிகுடியில் ம.தெ.எ.ப. பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டில் வீதி அபிவிருத்திப்பணிகள்!!

அண்மைக்காலமாக உலக வங்கி மற்றும் கம்பரெலிய அரச நிதியொதுக்கீட்டின் கீழ் ம.தெ.எ.ப. பிரதேச சபையினூடாக பிரதேசத்திற்குட்பட்ட பல உள் வீதிகள் முறையான கண்காணிப்போடு அமைக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம்  களுவாஞ்சிகுடி பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்களுக்கு முதன்முறையாக பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்ட 20 இலட்சம் ரூபாய் நிதியில் களுவாஞ்சிகுடி தில்லானை வீதியானது 75மீற்றர் வரை முறையான வடிகானோடு கூடிய கொங்கிரீட் வீதியாக மாற்றும் பணி மேகசுந்தம் வினோராஜ் அவர்களினால் கிராம அபிவிருத்தி சங்க இளைஞர்களின் பங்களிப்போடு இன்றைய தினம் திங்கட்கிழமை 11/11/2019 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தன் பிரதேசத்திற்குட்பட்ட வீதி அபிவிருத்தி பணிகளை பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்கள். தொடர்ச்சியாக முன்னின்று செயற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.0/Post a Comment/Comments

Previous Post Next Post