எந்த சூழலிலும் புதிய அரசாங்கத்தில் இணையப்போவதில்லை; விஜயமுனி சொய்சா

எந்த சந்தர்ப்பத்திலும் தான் புதிய அரசாங்கத்தில் இணைய போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்துடன் தான் இணைய தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்திகளில் எந்த உண்மையுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்ததாகவும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள போவதாகவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.