புதிய பாராளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு செல்ல தயார் - மனோ கணேசன்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன்தெரிவித்ததாவது, 
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள, "புதிய பாராளுமன்ற தேர்தல்" ஒன்றுக்கு செல்ல தயார் என அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இது பற்றி இன்று நடைபெறும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும் ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்படும்.
தொடர்ந்து அரசாங்கமாக இழுபறி படாமல் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து, உடன் தேர்தலுக்கு சென்று தேர்தலை சந்திக்க பெரும்பாலான கட்சி தலைவர்களும், அமைச்சர்களும் இணங்கினர் எனவும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post