புத்தாக்க கண்டுபிடிப்பிற்காக வவுனியா மாணவிக்கு உதவி!!

வவுனியா, சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி ஒருவருக்கு நோயாளர்களின் தன்னியக்க இரத்த பரிசோதனை உபகரணத்தின் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டுள்ளது.

செல்வி ரோகிதா புஸ்பதேவனுக்கு நேற்றைய தினம் இந்த ஊக்குவிப்பு தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது வவுனியா சைவப்பிரகாச மகளர் கல்லூரி அதிபர் பி.கமலேஸ்வரி, தொழிலுட்ப பாட ஆசிரியர் சாய்பிரசாத் ஆகியோர் முன்னிலையில் ஆசிரியர் ப.காண்டீபனினால் மாணவியிடம் உதவித் தொகை கையளிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.