இரண்டு கிலோ கஞ்சாவினை கடத்திய நபர் பொலிசாரினால் கைது!!

திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கிலோவும் 150 கிராம் கஞ்சவை கொண்டு சென்ற நபர் ஒருவரை நேற்றிரவு(17) கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேராறு கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் வவுனியாவிலிருந்து கந்தளாய் பகுதியிக்கு மோட்டார் சைக்கிளில் இரண்டு கிலோவும் 150 கிராம் கஞ்சாவை கொண்டு சென்ற போதே மொறவெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் ஹேரொயின் வழக்கொன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலே கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாகவும்,சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதோடு, சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.