மட்டக்களப்பில் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்ட உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல்!!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களுக்கான கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.

கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள், பிரதேசக் கிளைகளின் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகளுடன் பல்வேறு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மாவட்ட ரீதியில் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள், கட்சியின் மூலக் கிளைகள் உருவாக்கம் மற்றும் புனரமைப்பு, பிரதேச ரீதியான கட்சிக் கிளைகளைப் புனரமைத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், கட்சியின் பிரதேசக் கிளைகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.0/Post a Comment/Comments

Previous Post Next Post