'இல்லங்கள் தோறும் ஈழத்தின் தமிழிசை' நிகழ்வு.

குரலோசை - நுண்கலைகளின் தாயகத்தின் ஏற்பாட்டில் நிகழ்த்தப்பட்டு வருகின்ற 'இல்லங்கள் தோறும் ஈழத்தின் தமிழிசை' என்னும் நிகழ்வின் ஏழாவது நிகழ்வு திரு.திருமதி அழகேசன் மங்கையற்கரசி (இணுவில்) அவர்களின் இல்லத்தில் நேற்றுமுன்தினம்  (19.11.2019) மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொன்.ஸ்ரீவாமதேவன் த.றொபேட் ஸ்ரீ.மதுராங்கி க.ரஜீவன் அ.அமிர்தசிந்துஜன் மற்றும் சாரங்கன் ஆகியோரின் குரலிசை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஈழத்தின் முன்னணி அணிசெய் இசைக் கலைஞர்கள் பலரும் இந்நிகழ்வைச் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post