அதிரடியாக சில நியமனங்களை வழங்கினார் ஜனாதிபதி கோத்தாபய !

Image result for gotabaya rajapaksa"இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக நேற்றைய தினம் அனுராதபுரம் ருவன்வெலிசாயவில் கோத்தாபய ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இன்றைய தினம் காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார் 

இதையடுத்து உடனடியாக சில நியமனங்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், திறைசேரியின் செயலாளராக முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எஸ்.ஆர் ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் தலைவராக ஓசத சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post