நாட்டில் ஒருபோதும் இராணுவ ஆட்சிக்கு இடமில்லை;பாதுகாப்பு செயலாளர்!!

நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அனைத்து பிரஜைகளும் இன, மத பேதமின்றி கௌரவத்துடன் வாழக் கூட சூழலை உறுதிப்படுத்துவதற்காகவே முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டு ஜனநாயகம் கேள்விக்கு உட்படுத்தப்பட மாட்டாது என்றும் உறுதியளித்தார்.

நாட்டில் சாதாரணமாக சட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் ஏற்படும்போது பொலிஸாருக்கு அவை தொடர்பில் அறிவிக்கப்படும். நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்து நாட்டு மக்களுக்கு ஒழுக்கமானதும் அமைதியானதுமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க ஏதேனுமொரு பிரதேசத்தில் பிரச்சினைகள் ஏற்படும் போது பொலிஸாரால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது, பொலிஸில் விசேட பயிற்சி பெற்ற விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post