தான் விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்து மனைவியை வீதிக்கு வரவழைத்து கத்தியால் குத்திய கணவன் கைது!!

திரு­மண வீடு ஒன்றில் இருந்த தனது மனை­வியை தொலை­பே­சியில் அழைத்து வீதிக்கு வரச்­செய்து கத்­தியால் குத்தி காய­ம­டையச் செய்­த­தாகக் கூறப்­படும் அவ­ரது கண­வரை பயா­கல பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.


சம்­ப­வத்தில் பாணந்­துறை, நல்­லு­ரவ பிர­தே­சத்தைச் சேர்ந்த 41 வய­தான பெண் ஒரு­வரே இவ்­வாறு கத்திக் குத்தில் காய­ம­டைந்து களுத்­துறை, நாகொடை வைத்­தி­ய­சா­லையில் அனு­மதிக் கப்­பட்­டுள்ளார்.

சந்­தே­க­ந­பரின் மனைவி தனது பிள்­ளை­க­ளுடன் அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள திரு­மண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்­வ­தற்­காக சென்­றுள்ளார்.

அதன்­போது, சந்­தேக நப­ரான கணவர் தனது மனை­வியை தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு, தான் விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ள­தாகத் தெரி­வித்து பயா­கல, ஹல்­கந்­த­வில பாட­சா­லைக்கு அருகில் அவரை வர­வ­ழைத்­துள்­ள­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­நி­லையில், களுத்­துறை வல­யத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் உபுல் நில்­மினி ஆரி­ய­ரத்ன, உத­வி­பொலிஸ் அத்­தி­யட்­சகர் கபில பிரே­தாச மற்றும் பயா­கல பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி, பொலிஸ் பரி­சோ­தகர் டப்­ளியூ. குண­தி­லக்க ஆகி­யோரின் ஆலோ­ச­னைக்­க­மைய, உப பொலிஸ் பரி­சோ­தகர் தினேஸ் தலை­மையில் இச்­சம்­பவம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post