மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமனம்?இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இதுகுறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கலாநிதி நந்தலால் வீரசிங்க தற்போது இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநராக செயற்பட்டு வருகின்றார்.

இந்தநிலையிலேயே இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக வேறு ஒருவரை நியமிப்பதற்கு பதிலாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரியை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

புதிய ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ பதவி பிரமானம் செய்து கொண்டமையினைத் தொடர்ந்து, முக்கிய பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.Image result for nandhalal weerasinghe"

No comments

Powered by Blogger.