யாழ்ப்பாணத் தமிழ் சங்கத்தின் ஆறுமுகநாவலர் விழா நாளை.

யாழ்ப்பாணத் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் நினைவரங்கம் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களின் தலைமையில் நாளையதினம் (30.11.2019) சனிக்கிழமை காலை 09 மணி முதல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சபாலிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நினைவரங்கத்தில்   நல்லை ஆதீன முதல்வர்  ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் ஆசியுரையுடன் நடைபெறவுள்ளதுடன் நாவலர் நாளை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கப்படவுள்ளதுடன் கலை நிகழ்வுகளின் வரிசையில் சிறப்பு பட்டிமன்றமாக சொல்லின் செல்வர் இரா.செல்வ வடிவேல் அவர்களின் தலைமையில் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றும் "இன்றைய இளையோர் நாவலர் பாதையில் பயணிக்கின்றனரா? இல்லையா? " எனும் தொனிப் பொருளில் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post