கொழும்புத்துறை நான்காம் குறுக்கு வீதி புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு!!!

கொழும்புத்துறை நான்காம் குறுக்கு வீதி புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல்லை யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் கடந்த வெள்ளிக்கிழமை (08.11.2019) நாட்டி வைத்தார் 

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தொகுதிக்கான துரித ஊரெழுச்சி அபிவிருத்தி (கம்பரெலிய) திட்டத்தின் கீழ் யாழ் மாநகர முதல்வரின் சிபாரிசில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை 4ஆம் குறுக்கு வீதி புனரமைப்புப் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் முதலாவது அடிக்கல்லை நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் யாழ் மாநகர பிரதி முதல்வர் கௌரவ து.ஈசன், அப்பகுதி மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


No comments

Powered by Blogger.