ஊழியர் வேனில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டமைக்கு சுவிட்ஸர்லாந்து ஆட்சேபம்; விசாரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!!

கொழும்­பி­லுள்ள சுவிட்­ஸர்­லாந்து தூத­ர­கத்தின் உள்­நாட்டு ஊழியர் ஒருவர், வேன் ஒன்றில் அடை­யாளம் தெரி­யா­தோரால் கடத்­தப்­பட்டு, வேனுக்குள் சில மணி நேரம் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்­டுள்ள சம்­பவம் தொடர்பில், அந்­நாட்டின் வெளி­வி­வ­கார பேச்­சாளர் பியரே எலைன் எல்­சின்கர் உட­னடி விசா­ரணை மூலம் சந்­தேக நபர்­களை சட்­டத்தின் முன்­னி­றுத்தி தூத­ர­கத்தின் பாது­காப்பை உறுதி செய்ய இலங்கை    அரசாங்கத்தை வலியுறுத்து  வதாகதெரிவித்தார். 
 
இந் நிலையில் , பிர­தமர் மஹிந்த ராஜ­பக்க்ஷ மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­தன ஆகி­யோரை சுவிஸ் தூதுவர் ஹன்ஸ்­பீட்டர் மொக் தனித்­த­னி­யாக சந்­தித்து இந்தக் கடத்தல் சம்­பவம் தொடர்பில் பாரிய எதிர்ப்­பையும், உட­னடி விசா­ர­ணைக்­கான வலி­யு­றுத்­த­லையும் முன்­வைத்­துள்ளார், அதன் பிர­காரம் குற்ற விசா­ரணை திணைக்­களம் ஊடாக விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

கடந்த 25 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை கொழும்பில் உள்ள சுவிட்­ஸர்­லாந்து தூத­ர­கத்தில் வீஸா பிரிவில் கட­மை­யாற்­று­வ­தாக கூறப்­படும் தமிழ்ப் பெண் ஒருவர், அடை­யாளம் தெரி­யா­தோரால் வெள்ளை வேனில் கடத்­தப்­பட்டு வேனுக்­குள்ள வைத்தே அவர் விசா­ர­ணை­ககு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

இதன்­போது என்ன விசா­ரணை நடந்­தது என விரி­வாக சுவிட்­சர்­லாந்து வெளி­வி­வ­கார பேச்­சாளர் பியரே எலைன் எல்­சின்கர் மெட்ரோ நியூ­ஸுக்பு தெரி­விக்­காத போதும், ‘ தூத­ர­கத்தின் இர­க­சிய தக­வல்­களை பெறு­வது கடத்­தல்­கா­ரர்­களின் நோக்­க­மாக இருந்­துள்­ளது’ என தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும் தூத­ரக வாட்­டா­ரங்­களில் இருந்து கிடைக்கப் பெற்­றுள்ள தக­வல்கள் பிர­காரம், குறித்த பெண் அதி­காரி வேனில் கடத்­தப்­பட்­டதும் அவ­ரது கைய­டக்கத் தொலை­பே­சியை அதில் இருந்த அடை­யாளம் தெரி­யாத நபர்கள் பலாத்­கா­ர­மாக கைப்­பற்­றி­யுள்­ளனர். அத­னை­ய­டுத்து அந்த தொலை­பே­சியை ‘ அன் லொக் ‘ செய்­யு­மாறு அப்­பெண்ணை வற்­பு­றுத்­தி­யுள்­ளனர்.

குறிப்­பாக கடத்தல் சம்­ப­வத்­துக்கு முன்­னைய தினம், அதா­வது கடந்த 24 ஆம் திகதி அடைக்­கலம் தேடி சுவிட்­சர்­லாந்­துக்கு சென்ற குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் சமூக கொள்ளை விசா­ரணைப் பிரிவு பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா தொடர்பில் கடத்­த­ல­கா­ரர்கள் தூத­ரக பெண்­ணிடம் விசா­ரித்­துள்­ளனர்.

அவர் வீஸா பெற்ற விதம், அங்கு தங்­கி­யுள்ள இடம் உள்­ளிட்ட பல தக­வல்­களை அவர்கள் விசா­ரித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.இரண்டு மணி நேரம் கடத்­தல்­கா­ரர்­களின் பிடியில்:இந் நிலையில் குறித்த பெண் கடத்­தப்­பட்­டது முதல் இரு மணி நேரம் கடத்­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக நம்­பப்­படும் வேனுக்­குள்­ளேயே விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

இதன்­போது பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா விவ­கா­ரத்­துக்கு மேல­தி­க­மாக, சுவிட்­ஸர்­லாந்தில் அடைக்­கலம் அல்­லது அர­சியல் தஞ்சம் கோரி­யுள்­ள­வர்கள் குறித்த பெயர் பட்­டி­யலைப் பெற்­றுக்­கொள்ள கடத்­தல்­கா­ரர்கள் முயன்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந் நிலை­யி­லேயே, இந்த கடத்தல் மற்றும் அது குறித்த விட­யங்கள் தொடர்பில் கருத்து வெளி­யிட இலங்­கையில் உள்ள சுவிட்­ஸர்­லாந்து தூத­ரகம் விரும்­பாத நிலையில், சுவிட்­ஸர்­லாந்தின் வெளி­வி­வ­கார அமைச்­சான வெளி­வி­வ­கார விட­யங்­க­ளுக்­கான பெடரல் திணைக்­க­ளத்­திடம் ( Federal Department of Foreign Affairs) முழு­மை­யான விப­ரங்­களை கோரு­மாறு அந்த தூத­ரகம் ஊட­கங்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யது.

அதன்­ப­டியே, சுவிட்­சர்­லாந்து வெளி­வி­வ­கார பேச்­சாளர், இந்தச் சம்­பவம் குறித்து உத்­தி­யோ­க­பூர்­வ­மான தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தினார்.’ சுவிட்­சர்­லாந்து இந்த சம்­ப­வத்தை, எங்கள் இரா­ஜ­தந்­திர பிர­தி­நிதி அலு­வ­ல­கத்­துக்கும் அங்கு சேவையில் உள்ள சேவை­யா­ளர்­க­ளுக்கும் எதி­ரான மிக பார­தூ­ர­மா­னதும் ஏற்­றுக்­கொள்­ளவே முடி­யா­த­து­மான சம்­ப­வ­மாக பார்க்­கின்றோம். இத­னுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் மிக விரை­வாக சட்­டத்தின் முன் நிறுத்­தப்­படல் வேண்டும்.

இலங்­கையின் பிர­தமர் வெளி­வி­வ­கார அமைச்­சுடன் எமது தூதுவர் இது குறித்து பேசி­யுள்ளார். முழு சம்­பவம் தொடர்­பிலும் விபரம் கோரு­வ­தற்­காக இலங்­கையில் இருந்து எமது தூது­வரை நாம் மீள அழைத்­துள்ளோம்.’ என அவர் குறிப்­பிட்டார்.

கொழும்­பி­லுள்ள சுவிஸ் தூத­ர­கத்தில் கட­மை­யாற்றும் உள்ளூர் பெண் ஊழியர் ஒருவர் வேனில் இனந்­தெ­ரி­யா­தோரால் கடத்­தப்­பட்டு அச்­சு­றுத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் தீவி­ர­மாக கவனம் செலுத்­தி­யுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் வெளி­வி­வ­கார அமைச்சின் ஊட­கப்­பி­ரிவு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,கடந்த 25 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை கொழும்­பி­லுள்ள சுவிட்­ஸர்­லாந்து தூத­ர­கத்தில் உள்­நாட்டில் ஆட்­சேர்ப்பு செய்­யப்­பட்ட ஊழியர் தொடர்­பான குற்றச் சம்­பவம் குறித்து இலங்கை அர­சாங்கம் தீவி­ர­மாக கவனம் செலுத்­தி­யுள்­ளது.

குறித்த சம்­பவம் தொடர்­பாக நேற்­றைய தினம் தகவல் கிடைத்­ததும் இந்த விடயம் தொடர்­பாக விசா­ர­ணையை ஆரம்­பிப்­ப­தற்கு பொலிஸார் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் சுமு­க­மா­கவும், நிறு­வப்­பட்ட நடை­மு­றையின் பிர­கா­ரமும் விசா­ர­ணையை முன்­னெ­டுப்­ப­தற்­காக சுவிட்­சர்­லாந்து தூத­ர­கத்தின் முழு­மை­யான ஒத்­து­ழைப்பு கோரப்­பட்­டுள்­ளது.

சுவிட்­ஸர்­லாந்­திற்கு அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்­டுள்ள ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, விசாரணை குறித்த தற்போதைய தகவல்களை வழங்குவதற்காக விரைவில் சுவிஸ் அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

இலங்கையில் இராஜதந்திரப் பணிகள் சீராக இயங்குவதற்கு வசதியாக, இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா சாசனத்துக்கு (1961) ஒரு அரச தரப்பாக, பொறுப்பேற்றுள்ள கடமைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post