ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றைய தினம்  இரவு 7 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தயார்படுத்தல் குறித்து கலந்துரையாடவுள்ளதாக கட்சியின் பிரதித் தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளல் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாகவும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post