தமிழ் மக்களின் வேணவாக்களை புதிய ஜனாதிபதி நிறைவேற்றி இன ஐக்கியத்தை உருவாக்க வேண்டும்- சபா.குகதாஸ்.ஜனாதிபதி தேர்தல் வெற்றி தொடர்பில் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் ஐனநாயக வழியில் வாக்குரிமை மூலம் தங்களது அடிப்படை அபிலாசைகளான வேணவாக்களை வெளிப்படுத்தியுள்ளனர் இது 1977 ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக வடகிழக்கில் நடாத்தப்பட்ட தேர்தல்கள் எல்லாவற்றிலும் உறுதி செய்துள்ளனர் எனவும்

2019 ஐனாதிபதி தேர்தலிலும் தங்களுக்கான நியாயத்தை முன் நிறுத்தியே தமிழர்கள் வாக்களிப்பை மேற்கொண்டுள்ளனர் ஆனால் ஐனநாயகத்தில் 50% தாண்டுகின்ற போது பெரும்பாண்மை வெற்றியை ஏற்றுக்கொள்வது கட்டாயம் அந்தவகையில் கோட்டாபய ராஜபக்க்ஷவின் வெற்றியை இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

இந்த நாட்டில் சகல மக்களும் சந்தேகம் இன்றி உண்மையான இனநல்லிணக்கத்துடன் வாழ தமிழர்களின் வேணவாக்களை ஆராய்ந்து அவர்கள் திருப்தியடையும் வகையில் கொடுப்பதுடன் தொடர்ந்து ஐக்கிய இலங்கைக்குள் பயமின்றி அச்சமின்றி வாழக்கூடிய நிலையான சமாதானத்தை புதிய ஜனாதிபதி கோட்டாபய ஏற்படுத்த வேண்டும் அதுவே இலங்கைத்தீவின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பெரும் உந்து சக்தியாக விளங்கும். இதனை அவர்களால் ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வெற்றிமூலம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரமுன கட்சி பெரும்பாண்மை ஆசனங்களை பெற்று தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய சந்தர்ப்பம் தெளிவாக தெரிகிறது. கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்க்ஷ அவர்களிற்கு கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்களில் இறுதித் தடவை அவர் கூறியது போன்று 13 திருத்தத்தை முழுமையாக அமுழ்படுத்தி ஒரு சிறந்த அதிகாரப்பகிர்வை தமிழர்களுக்கு கொடுத்திருந்தால் 2015 மாற்றங்கள் ஏற்பட்டிருக்க மாட்டாது. 

அன்று மகிந்தவிடம் இருந்த பலம் இன்று மீண்டும் மகிந்த, கோட்டாவிடம் வந்துள்ளது. தமிழ் மக்களின் மனங்களில் நிரந்தரமாக நிலைப்பதற்கும் அவர்களின் அபிலாசைகளை ஜனநாயக வழியில் உறுதி செய்வதற்குமான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் ஜனநாயக வழியில் கேட்கும் அவர்களது அபிலாசைகளை தீர்க்ககூடிய சக்தி பெரும்பாண்மை ஆட்சியாளர்களிடம் தான் உள்ளது. அத்துடன் அதனை தீர்க்க முன்வரும் போது நாட்டில் குழப்பங்கள் இன்றி சந்தேகங்கள் இன்றி தீர்க்க முன்வர வேண்டும். இத்தனை தடைகளையும் தாண்டி தமிழர்களுக்கு தீர்வு கொடுக்கக் கூடிய ஆளுமை மகிந்த கோட்டாபய போன்றோருக்கு உண்டு இந்த வரலாற்றுக் கடமையை இவர்கள் செய்ய வேண்டும்.

அதனை நிறைவேற்றி தமிழர்களின் மனங்களை வெல்ல வேண்டும். இதுவே நாட்டின் நிலையான சமாதானத்திற்கு இடப்படும் அத்திபாரம் ஆகும் எனவும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post