தலைமன்னார் பிரதேச கடற்றொழில் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த டக்ளஸ்.

மன்னார் பள்ளிமுனை மற்றும் தலைமன்னார் பிரதேசங்களைச் சேர்ந்த கடற்றொழில் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் தாம் எதிர்கொள்ளும் தமது தொழில் சார்ந்த தடைகள் , பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக இன்றையதினம் கடற்றொழில் மற்றும் நிரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சில் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

ஈ.பி.டி.பி கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் சந்துரு அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் குறித்த மீன்பிடி சங்கங்களின் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.