தீ விபத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கான புதிய வீடமைப்பு திட்டத்தின் பணிகள் ஆரம்பம்.

டிக்கோயா போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கபட்ட
மக்களுக்கான புதிய வீடமைப்பு திட்டத்தின் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் முதற்கட்டபணி நேற்றையதினம் திங்கட்கிழமை (25.11.2019.) ஆரம்பித்து வைக்கபட்டது.

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமுக வலுவூட்டல் மற்றும் தோட்டஉட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தைவேல் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டடது.

இந் நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ்,நோர்வுட் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post