அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ;அவசரகால நிலை பிரகடனம்

Image result for அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீயின் புகை மண்டலம் தற்போது நியுசிலாந்துவரை பரவியுள்ளது.

இந்த 120 இடங்களில் பரவியுள்ள காட்டுத்தீ காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணஙகளுக்கு ஏழு நாட்களுக்கு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடுமையான கோடை வெப்பமும் பலமாக வெப்பக்காற்றும் காற்றும் காட்டுத்தீயின் பரவலை தீவிரமாக்கியுள்ளது.

இதனால் சிட்னி பெரும் பிராந்தியத்துக்கும் பேரழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீயினால் இதுவரை 970,000 ஹெக்டெயர் நிலம் அழிவடைந்துள்ளது.

இந்தக் காட்டுத் தீ காரணமாக இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். சுமார் 150ற்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகியுள்ளன.

No comments

Powered by Blogger.