மீசாலை கிழக்கு அருள்மிகு சித்திரவேலாயுதர் ஆலய கார்த்திகை உற்சவமும் வருடாந்த கந்தபுராண படன பூர்த்தி நிகழ்வும்.

மீசாலை கிழக்கு அருள்மிகு சித்திரவேலாயுதர் ஆலய ஐப்பசி மாத கார்த்திகை உற்சவமும் வருடாந்த கந்தபுராண படன பூர்த்தி நிகழ்வும் நேற்றையதினம் பெருமான் திருவருளோடு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வின் போது கந்தபுராண முற்றோதலை முன்னிட்டு மாணவர்கள் மத்தியிலே சித்திரவேலாயுதர் இந்து மன்றம் நடாத்திய கந்தபுராண திறந்த போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ கிருபாகரக்குருக்கள் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments

Powered by Blogger.