எட்டியாந்தோட்டை தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனுசா சந்திரசேகரன் கடும் கண்டனம்!!!

எட்டியாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் அனுசா சந்திரசேகரன் அவர்கள்.

"எட்டியாந்தோட்டை - கனேபல்ல மற்றும் சில பிரதேசங்களில் எம் உறவுகள் இனவாதத்தை தூண்டும் வகையில் காடையர்களால் தாக்கப்பட்டமை ஜனநாயகத்திற்கும் தனி மனித சுதந்திரத்திற்கும் எதிரானதாகும். அதேநேரம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது காவல் அதிகாரிகளினதும் சட்டத்தினதும் கடமையாகும்.

இந்த வகையிலான இழிவான செயலை புரிந்த இனவாதிகளின் கொடூர தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது.

இதில் பாதுகாப்பு துறையினர் மாத்திரமின்றி இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக எதிர்காலத்தில் இவ்வகையான சம்பவங்கள் இடம்பெறாவண்ணம் மக்களை பாதுகாக்க ஜனாதிபதி மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலையீட்டின் மூலம் தீர்வு காணப்படல் வேண்டும். இதற்காக நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

இது நம் ஒற்றுமைக்கு விடப்பட்ட சவாலாகும். கட்சி பேதமின்றி இலங்கைவாழ் அனைத்து தமிழர்களும் இந்த சந்தர்ப்பத்தில் ஒற்றுமையாக இருந்து எம் மக்கள் சக்தியை உணர்த்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்காக என்னாலான அனைத்து சேவைகளையும் அர்ப்பணிப்புடன் செய்ய எந்நேரமும் நான் தயாராக இருக்கிறேன்." எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.