சற்றுமுன்னர் அலரிமாளிகையில் இருந்து வெளியேறினார் ரணில்

ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் பதவியினை இராஜினாமா செய்துள்ள நிலையில் சற்றுமுன்னர் அலரிமாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார்.
சற்றுமுன்னர் பதவி விலகினார் பிரதமர்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார்.
இந்த முடிவினை அவர் நேற்றே எடுத்திருந்த நிலையில், இன்று இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் என பிரதமர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு குறித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகியதுடன் 15 பேர் கொண்ட காபந்து அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலையும் உடனடியாக நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.