எந்தவித பாரிய வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை-ருவான் குணசேகர.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதிக்குள் எந்தவித பாரிய வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்த காலப்பகுதியில் இருந்து தேர்தல் நிறைவு பெறும் வரையிலும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் எந்தவித பாரிய வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் தொடர்ந்தும் அமைதியான சூழல் காணப்படுகிறதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் நாட்டில் பலப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் 8ஆவது ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்ததுடன், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post