ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பணம் மோசடி! குடிவரவு – குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக பெண் ஒருவர் கைது!!

ஜப்­பானில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தரு­வ­தாக கூறி மோச­டியில் ஈடு­பட்ட பெண் ஒருவர் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.


வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் விசேட விசா­ரணைப் பிரி­ன­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வ­லுக்­க­மைய மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளுக்­க­மை­யவே குறித்த பெண் கைது செய்­யப்­பட்­ட­தாகவும், இவர் ஜப்­பானில் வேலை வாய்ப்பை பெற்றுத் தரு­வ­தாக குறிப்­பிட்டு 6 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்­டுள்ளார்.

இதே­வேளை குறித்த பெண் சட்­ட­வி­ரோ­த­மாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றை நடத்திச் சென்­றுள்ளார் என்றும் விசா­ர­ணை­களின் போது தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­நி­லையில் கடந்த 21 ஆம் திகதி குடி­வ­ரவு -குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­துக்கு முன்­பாக கைது செய்­யப்­பட்­டுள்ள பெண் மறுநாள் கம்­பஹா தொழி­லாளர் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார்.

இதன் போது நீதிவான் சந்­தேக நபரான பெண்ணை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post